நியாமும் தர்மமும் ஒரு பொம்பள புள்ளைக்கு இருந்துச்சுனா ,அந்த சாமியே துணையா இருக்கும் : அடுத்த முள்ளும் மலரா அண்ணாத்த ட்ரெய்லர்?
தமிழ் சினிமா ரசிகர்களின் தீபாவளி விருந்தாக ரசிகர்களை மகிழ்விக்க வரவுள்ள சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் ட்ரைலர், தீபாவளிக்கு முன் வெடிக்கும் சரவெடியாய் வெளிவந்துள்ளது.
ட்ரெய்லரைப் பார்த்த பிறகு, ஏற்கனவே இருந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' (Annaatthe) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டதிலிருந்து ரஜினி ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்தது.
இந்த படத்தில் ரஜினி ஒரு கிராமத் தலைவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதால், ரசிகர்கள் இந்த வேடத்தில் அவரைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.
இன்று வெளியான . ட்ரெய்லர் மற்றுமொரு ‘முள்ளும் மலரும்’ படம் போல் அண்ணன் - தங்கை பாசக்கதை என்பதை உணர்த்துகிறது. அண்ணனாக ரஜினியும் பாசத்தங்கையாக கீர்த்தி சுரேஷும் பாச மழை பொழிகின்றனர்.
[
அதே சமயம், குஷ்பு ‘மாமோய் என்றும் மீனா ‘அத்தான் என்று சொல்லி கலகலப்பூட்ட ரஜினி, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, நயன்தாரா என அனைவரும் ரசிகர்களை அழகால் ஈர்க்கிறார்கள். image பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு வில்லன்களாக நடிப்பில் மிரட்டுகிறார்கள்.
ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை தாண்டிச் செல்கிறது, ஒட்டு மொத்தமாக இந்த முறை அண்ணாத்த சர வெடி தீபாவளிதான் .