சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது - அடித்து சொல்லும் பிரபலம்!
பிரபல அனலிஸ்ட் சிஎஸ்கே குறித்து கணித்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
ஐபிஎல் ஏலம்
சிஎஸ்கே அணி இளம் வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பிளேயிங் லெவன் சிறப்பாக தயாராகி இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அஸ்வினின் நண்பரும், பிரபல அனலிஸ்ட்டுமான பிரசன்னா என்ற PDogg, சிஎஸ்கே அணியை பார்த்தால் கொஞ்சம் பாவமாக இருக்கிறது. தோனியின் வியூகமே இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வீரர்கள் நல்ல கலவையுடன் ஒரு அணியை கட்டமைப்பதுதான்.
பிரசன்னா ஆதங்கம்
அனுபவத்தை எந்த கடையிலும் வாங்கிவிட முடியாது. ஆனால் சிஎஸ்கே அணியில் அனுபவ வீரர்கள் என்று யாருமே இல்லை. டிவால்ட் பிரெவிஸ், சிவம் துபே ஆகியோர் மோசமான ஃபார்மில் இருக்கிறார்கள்.
டெத் பவுலிங் வீசுவதற்கு பவுலர்களே இல்லை. என்னை பொறுத்தவரை சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கே செல்லாது.
கடைசி 4 இடங்களில் தான் நிறைவு செய்யும் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.