ஐபிஎல் 2022 LIVE அப்டேட் - CSK vs KKR : பேட்டிங் செய்யும் சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து திணறல்
டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதுவரை இரு அணிகளும் 26 போட்டிகளில் மோதிய நிலையில், சென்னை அணி 17 போட்டிகளும், கொல்கத்தா அணி 8 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தாவிற்கு எதிராக நடக்கவிருக்கும் இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜடேஜா களமிறங்கவுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அதன்படி தொடக்க வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே களமிறங்கியுள்ளனர்.
இதில் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார் ருத்துராஜ் கெய்க்வாட், அடுத்த வீரராக ராபின் உத்தப்பா களத்தில் உள்ளார்.
மூன்று ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து சென்னை அணி 16 ரன்கள் எடுத்துள்ளது.
ருத்துராஜை தொடர்ந்து தொடக்க வீரராக களமிறங்கிய டெவான் கான்வே 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
நான்கு ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் எடுத்துள்ளது சென்னை.
28 ரன்களுக்கு ராபின் உத்தப்பா, 15 ரன்களுக்கு அம்பத்தி ராயுடும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.
இந்நிலையில் 4 விக்கெட் இழப்பில் 53 ரன்களுடன் ரவீந்தர ஜடேஜா மற்றும் ஷிவம் தூபே களத்தில் உள்ளனர்