"துண்டு ஒருதடவை தான் தவறும்” - கொல்கத்தாவை 9 ஆண்டுகளுக்குப் பின் பழிதீர்த்த சென்னை அணி
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ள நிலையில் அந்த அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 14வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இதன்மூலம் 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியிடன் அடைந்த தோல்விக்கு 9 ஆண்டுகளுக்குப் பின் அதே தோனி தலைமையிலான சென்னை அணி பழிதீர்த்துக்கொண்டது.
மேலும் கடந்த சீசனில் முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறிய சென்னை, இம்முறை சாம்பியனாக கம்பேக் கொடுத்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.