சொன்னதை செய்து காட்டிய தோனி - 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கிய சென்னை அணி
2021 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
நடப்பு ஐபிஎல் சீசனின் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் மோதிய இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை அணியில் ருத்துராஜ் 32, டூபிளஸ்சி 86, உத்தப்பா 31, மொயீன் அலி 37 ரன்கள் விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது.
இதனையடுத்து 193 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பான தொடக்கம் தந்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் அதனை பயன்படுத்த தவறினர்.
அதிகப்பட்சமாக சுப்மன் கில் 51, வெங்கடேஷ் ஐயர் 50, மாவி 20 , பெர்குசன் ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. சென்னை அணி தரப்பில் அதிகப்பட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
வெற்றி பெற்ற சென்னை அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
