91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி...!

Chennai Super Kings Delhi Capitals TATA IPL
By Thahir May 08, 2022 06:10 PM GMT
Report

டெல்லி அணியை மிரட்டல் பந்துவீச்சால் 91 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்டி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

15வது ஐபிஎல் போட்டியின் 55 லீக் போட்டி மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக டெவன் கான்வே 87 ரன்களும்,ருத்துராஜ் கெய்க்வாட் 41 ரன்களும் எடுத்தனர்.

91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி...! | Csk Won 91 Runs Dc Ipl 2022

இதன்பின் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஸ்ரீகர் பரத் (8) மற்றும் டேவிட் வார்னர் (19) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் மிட்செல் மார்ஸ் (25), ரிஷப் பண்ட் (21) மற்றும் ஷர்துல் தாகூர் (24) ஆஇய மூன்று பேரை மற்றவர்கள் அனைவரும், சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால்,

17.4 ஓவரில் வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மொய்ன் அலி, 4 ஓவரில் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி...! | Csk Won 91 Runs Dc Ipl 2022

அதே போல் முகேஷ் சவுத்ரி, சிம்ரஜித் சிங் மற்றும் டூவைன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.