சென்னை அணி கோப்பை வெல்ல காரணம் இதுதான் - ரெய்னா சொன்ன ரகசியம்

ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை வெல்ல என்ன காரணம் என அணி வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

கடந்த வருட ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த வீரர்களை வைத்து கொண்டு இனி சென்னை அணியால் எதுவும் செய்ய முடியாது என விமர்சித்தவர்களுக்கு அதே வீரர்களை கொண்டு பதிலடி கொடுக்கப்பட்டது தான் உச்சக்கட்ட சிறப்பு. 

சென்னை  அணியின் இந்த திடீர் எழுச்சிக்கு அந்த அணியின் அனைத்து வீரர்களின் கடின உழைப்பும், முயற்சியும் தான் காரணம் என்றாலும் தோனிக்காக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை அணி விளையாடிய தகவலையும் தெரிவித்துள்ளார். 

மேலும்  ஐபிஎல் தொடரை நேரில் வந்து பார்க்க முடியாத எங்களது ரசிகர்களுக்காகவும் ஐபிஎல் கோப்பையை வெல்ல நினைத்தோம். இந்த தொடர் மிக கடினமாக இருந்தது, ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவே எங்களுக்கு ஊக்கத்தையும் கொடுத்தது. தோனி போன்ற ஒரு மிகப்பெரும் தலைவனின் வழிநடத்தலில் விளையாடினாலும் எப்படிப்பட்ட வீரருக்கும் வெற்றி ஒன்று மட்டுமே நோக்கமாக இருக்கும் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்