இதுதான் தல கணக்கு : ஸ்கெட்ச் போட்ட தோனி விக்கெட்டை இழந்த கோலி
பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது,
15வது ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 95 ரன்களும், ராபின் உத்தப்பா 88 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டூபிளசிஸ் (8) மற்றும் அனுஜ் ராவத் (12) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
இதன்பின் களத்திற்கு வந்த விராட் கோலி 1 ரன்னில் வெளியேறினார். இதன்பின் களத்திற்கு வந்த கிளன் மேக்ஸ்வெல் (26), சபாஷ் அகமத் (41), சுயாஸ் பிரபுதேஸாய் (34) மற்றும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், பேட்ஸ்மேன்கள் இறுதி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்த தவறியதால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது .
இந்த நிலையில் மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட்கோலியினை அவுட்டாக்க தோனி போட்ட மாஸ்டர் பிளான் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது
[