அடுத்த போட்டிக்கான சென்னை அணி இது தான் - உற்சாகத்தில் ரசிகர்கள்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் அணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இன்று நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.
இதனிடையே இந்த போட்டிக்கான சென்னை அணியை பொறுத்தவரையில் பெரிதாக மாற்றம் எதுவும் இருக்காது என்றே கூறப்படுகிறது. டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் ஜெகதீஷன், கிருஷ்ணப்பா கவுதம் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக ராபின் உத்தப்பாவே இந்த போட்டியிலும் விளையாடுவார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசி நேரத்தில் தோனியின் முடிவும் வேறு மாதிரி இருக்கலாம்.
சென்னை அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
டூபிளசிஸ், ருத்துராஜ் கெய்க்வாட், மொய்ன் அலி, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, தோனி, ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜாஸ் ஹேசில்வுட்.