ஆரம்பமே அமர்க்களம்! டாஸ் வென்ற சி.எஸ்.கே அணி - பேட்டிங் தேர்வு : ரசிகர்கள் உற்சாகம்!
மும்பையில் நடைபெற்று கொண்டிருக்கும் ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டித் தொடர் இன்று மீண்டும் தொடங்கியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மே 3 ஆம் தேதியுடன் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தது. இதனையடுத்து மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற சென்னை சூப்பர் சிங்க்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர்.