முடக்கிய மும்பை அணி : கர்ஜிக்கும் சென்னை சிங்கங்கள் வெற்றி யாருக்கு ?

ipl2021 mumbaiindians cskvsmi
By Irumporai Sep 19, 2021 05:15 PM GMT
Report

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி, ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். அம்பத்தி ராயுடு காயம் காரணமாக ரன் எடுக்காமல் வெளியேறினார்.

கேப்டன் டோனி 3 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சென்னை அணி 24 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. விக்கெட் ஒரு பக்கம் வீழ்ந்தாலும், மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஸ் அபாரமாக விளையாடினார்.

அவருக்கு துணையாக ஜடேஜா விளையாடிய நிலையில், 33 பந்தில் 26 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். அப்போது சென்னை அணி 16.4 ஓவரில் 105 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய அதிரடி சிக்ஸர் மன்னன் வெய்ன் பிராவோ 8 பந்தில் 3 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து அசத்தினார்

. இறுதியில் சென்னை அணி, 20 ஓவரில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 41 ரன்னில் அரைசதம் அடித்த ருதுராஜ், இறுதிவரை ஆட்டமிலாமல் 58 பந்தில் 88 ரன்கள் அடித்து அசத்தினார். 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 விக்கெட்களை கொடுத்து தடுமாறி ஆடி வருகின்றது.

[IEUECQ ]

டி காக் 17 ரன்னுக்கும், அன்மோல்ப்ரீத் சிங் 16 ரன்னுக்கும், சூரியகுமார் யாதவ் 3 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு, இஷான் கிஷன் மற்றும் சௌரப் திவாரி பாட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தனர். ஆனால், 10-வது ஓவரை வீசிய டுவைன் பிராவோ சிறப்பான பீல்டிங் அமைப்பு மூலம் கிஷன் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால், 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தற்போதுவரை மும்பை அணி 10 ஓவர்கள் முடிவி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.