சேப்பாக்கத்தில் சரித்திரம் படைக்குமா சென்னை அணி? - எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியில் வெல்லப்போவது எந்த அணி என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
CSK vs GT
2023, IPL கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணி அளவில் போட்டி நடக்கவுள்ளது.
இதில் சென்னை அணி மற்றும் குஜராத் அணி மோத உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு தேர்வாக உள்ளது.
மேலும், தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த சீசனில் நடைபெற்ற 7 போட்டிகளில் சென்னை அணி நான்கு போட்டியில் வெற்றியும் மூன்று போட்டியில் தோல்வியும் தழுவி இருக்கிறது.
வெற்றி யாருக்கு?
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானம் தேய்மானம் அடைந்து உள்ளது.
இதனால் இன்று பெட்டிங் கொஞ்சம் கடினமாகவே இருக்கும் என்றும், வழக்கம்போல் சுழற் பந்துவீச்சாளர்கள் கையே இங்கு ஓங்கி இருக்கும் என்றும் கூறப்படப்படுகிறது.
இதுவரை ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி மூன்று முறை மட்டும் தான் சேசிங் செய்து தோல்வியை தழுவி இருக்கிறது.
இதனால் இந்த ஆட்டத்தில் குஜராத்தை சேசிங் செய்ய விடுவது சென்னைக்கு பாதகமாக இருக்கும்.
இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது நல்ல முடிவாக இருக்கும்.
இன்றைய ஆட்டத்தில் எந்த அணி சுழற் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டு தைரியமாக ரன்களை சேர்க்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.