சுரேஷ் ரெய்னாவின் ட்விட்டர் பதிவால் நொந்து போன சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் ட்விட்டர் பதிவை பார்த்து சென்னை அணி ரசிகர்கள் மனமுடைந்துள்ளனர்.
புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் ட்விட்டர் பதிவு மிகுந்த மனவேதனையை ரசிகர்களுக்கு தந்துள்ளது.
சென்னை அணிக்காக 13 சீசன்களுக்காக விளையாடிவந்த சுரேஷ் ரெய்னா ரசிகர்களால் செல்லமாக சின்ன தல என்றும் கிரிக்கெட் நிபுணர்களால் Mr.IPL என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.
இவரை இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் எந்தவொரு அணியும் எடுக்கத்தால் இவர் ஐபிஎல்-லில் விலைபோகாதாக வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்,
சென்னை அணிக்காக மட்டும் கிட்டத்தட்ட 5000 ஓட்டங்கள் வரை சேர்த்த சுரேஷ் ரெய்னாவை சென்னை அணியே எடுக்கத்தால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடி சென்னை அணி படுதோல்வி அடைந்து,
இதுவரை விளையாண்ட 6 போட்டிகளில் 5 தோல்வி அடைந்துவிட்டோம் என்ற சோகத்தில் ரசிகர்கள் இருக்கும் போது ரெய்னா போட அந்த ட்வீட் ஒற்றை சென்னை ரசிகர்களை மேலும் சோகத்தில் தள்ளியுள்ளது.
சென்னை ரசிகர்களே, கைக்கு கிடைத்த வெற்றியை பறிகொடுத்து விட்டோம் என வருத்தத்தில் இருக்கும் போது, "என்னவொரு அற்புதமான போட்டி, இத்தகைய நெருக்கமான போட்டிகள் மூலம் ஐபிஎல் மீண்டும் உயிர்ப்பிக்கிறது,
மேலும் பந்துகளை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட மில்லருக்கும் முதல்முறையாக கேப்டனாக களமிறங்கி இருக்கும் ரஷித் கானுக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்து ட்வீட் செய்து இருந்தது சென்னை ரசிகர்களை மேலும் மனவலியை தந்துள்ளது.
What a match. IPL has come alive with this close encounter. Congratulations to Rashid on debut as a captain, and Miller sent the ball all over the park.#CSKvsGT
— Suresh Raina?? (@ImRaina) April 17, 2022