CSK vs GT; சென்னை வெற்றி பெற பிரார்த்திக்கும் RCB ரசிகர்கள் - என்ன காரணம்?
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளது.
CSK vs GT
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியும், கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியும் இந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக மோத உள்ளது.
தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாவிட்டால் இதுவே அவரது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும்.
இதனால் இந்த போட்டியில் சென்னை ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற நினைப்பில் CSK ரசிகர்கள் உள்ளனர்.
இதே போல், சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமென RCB ரசிகர்களும் விரும்புகிறார்கள்.
சென்னையின் வெற்றியை எதிர்பார்க்கும் RCB
காரணம் பிளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பெங்களூரு அணி 3வது இடத்தில் உள்ளது. முதல் 2 இடத்தில் இருந்தால் மட்டுமே குவாலிபயர் 1 போட்டிக்குத் தகுதி பெற முடியும்.
குவாலிஃபயர் 1 போட்டியில் வென்றால் நேரடியாக ஃபைனலுக்கு செல்லலாம். ஒருவேளை அதில் தோற்றாலும், எலிமினேட்டரில் வென்று வரும் அணியுடன் குவாலிபயர் 2 போட்டியில் மோதி, அந்தப் போட்டியில் வென்றால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெறலாம்.
அதேவேளையில், 2வது இடத்திற்கு வருவதற்கு RCB அணிக்கு சில சிக்கல்கள் உள்ளது.
RCB மே 27 ஆம் தேதி நடைபெற உள்ள லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
மேலும், இன்றைய போட்டியில், சென்னை அணி முதலிடத்தில் உள்ள குஜராத் அணியை வீழ்த்த வேண்டும்.
நாளை நடைபெற உள்ள போட்டியில், மும்பை அணி பஞ்சாபை வீழ்த்த வேண்டும்.
இதெல்லாம் நடந்தால் RCB அணி 2வது இடத்திற்கு செல்ல வேண்டும். இதன் காரணமாக சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் RCB ரசிகர்கள் உள்ளனர்.