தோல்விக்கு இது தான் காரணம் - வேதனையில் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா..!
சென்னை அணியின் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
15வது ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரசீத் கான் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ரசீத் கான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 48 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதையடுத்து ஜோர்டன் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தார்.
இந்த நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜடேஜா பேசுகையில், “இந்த போட்டியை நாங்கள் மிக சிறப்பாக துவங்கினோம். பந்துவீச்சின் போது முதல் 6 ஓவர்களில் மிக சிறப்பாக செயல்பட்டோம். பந்துவீச்சில் நாங்கள் வைத்திருந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை என்பதே உண்மை. குறிப்பாக கடைசி ஐந்து ஓவர்களில் எங்களது திட்டங்களை செயல்படுத்த தவறிவிட்டோம். கிரிஸ் ஜோர்டன் யார்கர் பந்துகள் வீசியிருக்க வேண்டும், ஆனால் அதை அவர் செய்ய தவறிவிட்டார். டி.20 போட்டிகளில் இது போன்று நடப்பு இயல்பானது தான்” என்று தெரிவித்தார்.