டூ..டூ..டூ.. பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட CSK வீரர்கள் - வைரலாகும் வீடியோ

Nandhini
in கிரிக்கெட்Report this article
சமூகவலைத்தளத்தில் CSK வீரர்கள் வேஷ்டி, சட்டையுடன் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உலக அளவில் புகழ்பெற்றது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர். இந்த தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இறுதி பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார் தோனி. இதை கொண்டாடும் விதமாக CSK நிர்வாகம் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் தோனி, பிராவோ, ருதுராஜ் உள்பட வீரர்கள் அனைவரும் வேஷ்டி சட்டையுடன் டூடூடூ பாடலுக்கு மாஸாக நடனமாடியுள்ளனர்.
தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
Saturday Night Party Mood: Kaathuvaakula Konjam ? to the Superfans!? We Yellove you two! ?#WhistlePodu ?? pic.twitter.com/1Wc5PyD2h7
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2022