தோனி அண்ணனுக்காக ஐபிஎல் கோப்பையை ஜெயிக்கணும்: சுரேஷ் ரெய்னா நம்பிக்கை
இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை தோனிக்காக சிஎஸ்கே வெல்ல வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை எந்த அளவிற்கு தல என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் அதே அளவிற்கு சுரேஷ் ரெய்னா மையும் சின்ன தல என்று அழைப்பது வழக்கம். இதனிடையே ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனலில் பேட்டி அளித்த சுரேஷ் ரெய்னா தோனி குறித்து பல சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் தோனியும் நானும் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணிக்காக நிறையப் போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். சிஎஸ்கேவுக்காக நானும் அவரும் ஏறக்குறைய 200 போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறோம். நான் அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். அவர் எனக்கு மூத்த சகோதரரை போன்றவர். அவரிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதை குறைந்ததே இல்லை என்றும், அதனால் இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கேவுக்காக வென்று தர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருக்கிறது என்றும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
