ஆள் ஏரியாவிலும் அய்யா கில்லி டா : அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சிஎஸ்கே ஆதிக்கம்
மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
மற்றொரு தொடக்க வீரரான டெவன் கான்வே 16 ரன்களில் அவுட்டானார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மொய்ன் அலி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளினார். 19 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் வேகமாக ரன் குவித்தார்.
ஆனால் மறுமுனையில் ஜெகதீஷன் (1), அம்பத்தி ராயூடு (3), சாண்டனர் (1) ரன்கள் எடுத்து அவுட்டாயினர். கடைசி கட்டத்தில் தோனி 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக மெக்காய், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து களம் கண்ட ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 59, ரவிச்சந்திரன் 40 ரன்கள் விளாச 19.4 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Our share of ? four the teams ahead of the playoffs! Go well! ?#WhistlePodu #Yellove ? pic.twitter.com/b0u5sjoSSV
— Chennai Super Kings (@ChennaiIPL) May 24, 2022
இதன்மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் ப்ளே ஆஃப் ஆட்டங்களில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
ஐபிஎல் ப்ளே ஆஃ ஆட்டங்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் 5 இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விரர்கள் உள்ளனர்.
வீரர்களின் விபரம் :
ரெய்னா - (714)
தோனி -(522)
வாட்சன் - (389)
ஹஸ்ஸி (388)
முரளி விஜய் (364)
இதில் சென்னை அணி அதிகபட்சமாக (40) சிக்ஸ்களும் ஃபோர் (51) அடித்தத்தில் ரெய்னாவும் அதிகவிக்கெட் (28) எடுத்ததில் பிராவோவும் முதலிடத்தில் உள்ளனர்.