தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா - இன்னொரு ருத்துராஜ் ரெடி இளம் வீரரை குறிவைத்த சி.எஸ்.கே
ஐ.பி.எல். 2022ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக 10 அணிகள் பங்கேற்கும் தொடராக உள்ளது. இதற்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது.
இதற்கான வேலையை மற்ற அணிகள் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டனர். லக்கேனா அணி பயிற்சியாளர், மெண்டர் என அனைத்து பொறுப்புக்கும் முன்னாள் வீரர்களை நியமித்துள்ளது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றி எந்த செய்தியும் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். அதற்காகவே உங்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ். சென்னை அணி அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து முழுக்க முழுக்க இளம் வீரர்களையே தேர்வு செய்ய உள்ளது. அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில், சென்னை அணி தற்போது, இன்னொரு ருத்துராஜ் கெய்க்வாட்டை கண்டுபிடித்துள்ளது ஓடிசாவை சேர்ந்த 24 வயதான சுப்ரான்சு சேனாபதியை தான் சென்னை அணி தற்போது குறிவைத்துள்ளது.
சேனாபதி விஜய் ஹசாரே கோப்பையில் ஓடிசா அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது வரை 7 போட்டிகளில் அவர் 275 ரன்கள் விளாசியுள்ளார். அதில் ஒரு சதமும் அடங்கும் சி.எஸ்.கே. திட்டம்
Subhranshu Senapati Called for Selection Trials by the champions CSK in the IPL. Bringing you his batting highlights from the recently concluded Vijay Hazare Trophy & Syed Mushtaq Ali Trophy. @BCCI @ChennaiIPL @cricket_odisha @WasimJaffer14 pic.twitter.com/gBKlFDaDX4
— Odisha Cricket Association (@cricket_odisha) December 18, 2021
இதே போன்று சையது முஸ்தாக் அலி தொடரிலும் சேனாபதி 5 போட்டிகளில் விளையாடி 138 ரன்கள் விளாசியுள்ளார். சேனாபதியில் பேட்டிங் டைலும் கிட்டதட்ட ருத்துராஜை போல் உள்ளது.
இதனால் அவரை சென்னைக்கு அழைத்து, அவரது பேட்டிங்கை பரிசோதித்து பார்க்க சென்னை அணி திட்டமிட்டுள்ளது. இதனால் ஏலத்தில் சேனாபதியை சென்னை அணி குறிவைக்கும். இது போன்று உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கும் வீரர்களை குறிவைத்து, சென்னை அணி ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது