டெல்லி அணியின் பந்துவீச்சை சிதற அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள்- 224 ரன்கள் இலக்கு..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 14 வது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
அதிரடி காட்டிய சென்னை அணி
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி விளையாடி வருகிறது.
போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்ற நிலையில் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை சிதறடித்தனர். களம் இறங்கிய ருத்துராஜ் கெய்க்குவாட் 50 பந்துகளில் 79 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
224 ரன்கள் இலக்கு
பின்னர் களம் இறங்கிய சிவம் துபே 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில், கலில் அகமது வீசிய பந்தில் அவுட்டானார். எம்.எஸ்.தோனி 4 பந்துகளில் 5 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 7 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தனர்.20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணியின் சார்பில் கலில் அகமது, நார்ச்சி, சாக்காரியா தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்க உள்ளது.