பெங்களூர் பந்துவீச்சை சிதறடித்த சென்னை அணி வீரர்கள் - கொண்டாடும் ரசிகர்கள்
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடியதால் மெகா இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நவி மும்பையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் 17 ரன்களிலும், மொயீன் அலி 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
தொடர்ந்து களம் கண்ட ஷிவம் டூபே, ராபின் உத்தப்பா இருவரும் பெங்களூர் பந்துவீச்சை சிதறடித்தனர். பவுண்டரி ,சிக்சருக்கு பந்துக்கள் பறக்க அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. உத்தப்பா 88 ரன்களில் அவுட்டாக, ஷிவம் டூபே 94 ரன்கள் குவித்து கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.