192 ரன்களை குவித்த சென்னை அணி - சாம்பியன் பட்டத்தை வெல்லுமா கொல்கத்தா
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு 193 ரன்களை இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் மோதும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருத்துராஜ் கெய்க்வாட், டூபிளஸ்சி இருவரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை அடித்து விளையாடி ரன் வேகம் உயர்ந்தது. கெய்க்வாட் 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து உத்தப்பா களமிறங்கி விளாச தொடங்கினார்.
15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து உத்தப்பா விக்கெட்டை இழந்தார். அதேசமயம் தொடக்க வீரர் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது.
டுப்ளஸ்ஸி 86 ரன், மொயின் அலி 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து 193 ரன்களை இலக்காக கொண்டு கோப்பையை கைப்பற்ற கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
