பந்துவீச்சில் மிரட்டிய டெல்லி - 136 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை

ipl2021 CSKvsDC
By Petchi Avudaiappan Oct 04, 2021 03:39 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 137 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

துபாய் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் கெய்க்வாட்(13 ரன்கள்), டூபிளிசிஸ் (10 ரன்கள்), உத்தப்பா(19 ரன்கள்), மொயீன் அலி(5 ரன்கள்) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க 8.3 ஓவர்களில் அந்த அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

இதனைத் தொடர்ந்து களம் கண்ட அம்பத்தி ராயுடு - கேப்டன் தோனி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்க போராடினர். இதில் தோனி 18 ரன்களில் அவுட்டாக அம்பத்தி ராயுடு அரைசதமடித்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

டெல்லி அணி தரப்பில் அக்ஸர் படேல் அதிகப்பட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனிடையே 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது.