ரசிகர்களுக்கு சூப்பரான செய்தி... முதல் போட்டியில் விளையாடும் சென்னை அணி இதுதான்!
ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடவுள்ள முதல் போட்டிக்கான வீரர்களின் உத்தேசப்பட்டியல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் சுரேஷ் ரெய்னா, பாப் டூபிளெசிஸ், ஷர்துல் தாகூர், போன்ற வீரர்கள் இல்லாமல் களமிறங்குவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேபோல் ருத்துராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டனர். இதனால் சென்னை அணி கேப்டன் தோனி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
இதனிடையே ருத்துராஜ் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பவே, ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் முதல் போட்டியில் பங்கேற்கும் உத்தேச அணி தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பான பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ருத்துராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே, ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி, ட்வைன் பிராவோ, ராஜ்வர்தன் ஹர்கர்கேகர், முகமது ஆஷிப், ஆடம் மில்னே ஆகியோர் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.