20,800 பேர் குவிந்த ROAR 26 - U19 உலக கோப்பை வென்ற CSK வீரர்களுக்கு நினைவு பரிசு

MS Dhoni Chennai Super Kings Sanju Samson Shivam Dube
By Karthikraja Mar 22, 2026 02:32 PM GMT
Report

ROAR 26 நிகழ்வில் U19 உலக கோப்பை வென்ற CSK வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

CSK ROAR 26

2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. மார்ச் 30 ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெறும் தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

20,800 பேர் குவிந்த ROAR 26 - U19 உலக கோப்பை வென்ற CSK வீரர்களுக்கு நினைவு பரிசு | Csk Roar 2026 Wc Champions Honoured By Dhoni

இந்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்த ROAR 26 என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை காண சுமார் 20,800 ரசிகர்கள் குவிந்துள்ளனர். 

மைதானத்திற்கு வந்த தோனியை கண்டு ரசிகர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர்.

நினைவு பரிசு வழங்கிய தோனி

இதில் T20 உலக கோப்பை வென்ற அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், சிவம் துபே ஆகிய CSK வீரர்களுக்கு CSK அணி சார்பில் தோனி நினைவு பரிசு வழங்கினார். 

அதனை தொடர்ந்து அணி வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். OG Reunion என இதற்கு முன்னர் CSK அணியில் விளையாடிய மத்தியூ ஹைடன், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் CSK வீரர்களும், தற்போதையை CSK அணியும் இணைந்து பயிற்சி ஆட்டம் ஆடினர்.  

இதன் பின்னர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.

இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற CSK அணி, வெற்றிகரமான IPL அணிகளில் ஒன்றாக உள்ளது.