முரட்டு ஃபார்மில் ஜெகதீசன்.. எதையுமே யோசிக்கல - ஒதுக்கிய சிஎஸ்கே!
விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து 5 சதங்களை அடித்து அசத்தியுள்ளார் நாராயணன் ஜெகதீசன்.
ஜெகதீசன்
நாடு முழுவதும் விஜய் ஹசாரே தொடர் கடந்த நவ.12ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஒருநாள் போட்டி வடிவில் நடைபெறும். இதில் மொத்தம், 40 அணிகள் விளையாடுகின்றன. இவை 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவில் தலா 8 அணிகள் இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், இன்று அருணாச்சல பிரதேச அணியுடன், தமிழ்நாடு அணி பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் தமிழ்நாடு அணிக்கு சாய் சுதர்சன் - நாராயணன் ஜெகதீசன் இணை தொடக்க வீரராக களமிறங்கியது.
சிஎஸ்கே அணியில்?
வெறித்தனமான ஃபார்மில் இருக்கும் நாராயணன் ஜெகதீசன் வெறும் 141 பந்துகளில் 25 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள் என 277 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம், தொடர்ச்சியாக ஐந்து சதங்களை, முதல் தர போட்டிகளை அடித்து நாராயணன் ஜெகதீசன் உலக சாதனையை படைத்துள்ளார்.
நாராயணன் ஜெகதீசன் நடப்பு தொடரில் 6 போட்டிகளில் மொத்தம் 799 ரன்களை குவித்துள்ளார். தற்போது, இந்த போட்டியில் 5ஆவது சதத்தை பதிவு செய்ததை தொடர்ந்து, விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில், ஒரே தொடரில் 5 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தொடர்ந்து, வரும் ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், மினி ஏலத்தில் அதிக தொகைக்கு இவர் ஏலம் போக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.