பெங்களூரு அணிக்கெதிராக விளையாடப்போகும் சென்னை அணி இதுதான்... இரண்டு வீரர்கள் நீக்கம்
பெங்களூரு அணிக்கெதிராக விளையாடப்போகும் சென்னை அணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் இதுவரை 48 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மும்பை அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் எப்படியாவது அடுத்த சுற்று செல்லவோ அல்லது புள்ளிப்பட்டியலில் கௌரவமான இடத்தை பெறவோ பிற அணிகள் அனைத்தும் போட்டி போட்டு தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள சென்னை அணியும், 5வது இடத்தில் உள்ள பெங்களூரு அணியும் நாளை மோதவுள்ளது. புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி என்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சென்னை அணியில் ஒரு சில மாற்றங்களுடன் களமிறங்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் விளையாடாத நிலையில் பெங்களூர் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சிவம் துபே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இதேபோல் மிட்செல் சாட்னர் அல்லது ட்வைன் பிராவோ ஆகிய இருவரில் ஒருவருக்கு இடம் கிடைக்கலாம்.
இப்போட்டிக்கான உத்தேச வீரர்கள் பட்டியலில் டெவன் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, சிவம் துபே, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ/சாட்னர், டூவைன் ப்ரெடோரியஸ், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷன்னா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.