முதல் போட்டிக்கான சென்னை அணி இதுதான் - கொல்கத்தாவுக்கு ஆப்பு

IPL2022 chennaisuperkings CSKvKKR TATAIPL2022 KKRvCSK
By Petchi Avudaiappan Mar 26, 2022 10:07 AM GMT
Report

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக விளையாடும் சென்னை அணியின் உத்தேசப்பட்டியல் வெளியாகியுள்ளது. 

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை இரு அணிகளும் 26 போட்டிகளில் மோதிய நிலையில், சென்னை அணி 17 போட்டிகளும், கொல்கத்தா அணி 8 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ளது.

இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜடேஜா களமிறங்கவுள்ளதால் ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் இந்த போட்டியில் ஆடும்  சென்னை அணியின் உத்தேசப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி ருத்துராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, சிவம் துபே, தோனி, ஜடேஜா, டூவைன் பிராவோ, ஆடம் மில்னே, ராஜவர்தன் ஹங்ரேக்கர், மகேஷ் தீக்‌ஷன்னா ஆகியோர் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.