சென்னை அணி பிளே ஆஃப் செல்வது உறுதி... ஆனால் ஒரு விஷயம்...!

MS Dhoni Chennai Super Kings TATA IPL IPL 2022
By Petchi Avudaiappan May 09, 2022 06:10 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணி பிளே ஆஃப் செல்ல வேண்டும் என்றால் என்ன நடக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளது.

இதுவரை 55 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மும்பை அணி தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டது. இதற்கு அடுத்தப்படியாக சென்னை அணி வெளியேறும் நிலையில் உள்ளது. குஜராத், லக்னோ தங்களுடைய பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளதால் மீதமுள்ள 2 இடங்களுக்கு ராஜஸ்தான், ஹைதராபாத், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன.

 இதில் சென்னை அணி பிளே ஆஃப் செல்ல சில வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. முதலாவதாக சென்னை அணி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று மொத்தம் 14 புள்ளிகள் பெற வேண்டும்.

அதன்பின் மற்ற அணிகள் விளையாடும் போட்டிகள் சென்னை சாதகமாக அமைய வேண்டும். அதாவது கொல்கத்தாவுடனான போட்டியில் மும்பையும், டெல்லி உடனான போட்டியில் ராஜஸ்தானும், பெங்களூரு உடனான போட்டியில் பஞ்சாப்பும், ஹைதராபாத்துடனான போட்டியில் கொல்கத்தாவும்,  டெல்லி உடனான போட்டியில் பஞ்சாப்பும், ஹைதராபாத்துடனான போட்டியில் மும்பையும்,  கொல்கத்தாவுடனான போட்டியில் லக்னோவும், பெங்களூருவுடனான போட்டியில் குஜராத்தும், டெல்லி உடனான போட்டியில் மும்பையும் வெற்றி பெற வேண்டும். 

கேட்பதற்கே தலைசுற்ற வைக்கும் இதெல்லாம் நடந்தால் சென்னை பிளே ஆஃப் செல்வது உறுதி. ஆனால் பிளே ஆஃப் பற்றியெல்லாம் தான் கவலைப்படுவதில்லை. அவ்வாறு செல்லாவிட்டால் ஒன்றும் உலகம் அழிந்து விடாது என அந்த அணியின் கேப்டன் தோனி நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.