தீபக் சாஹரால் சிக்கலில் சிக்கிய தோனி - ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா?
வெஸ்ட் அணிக்கு எதிரான 3வது டி20 தொடரின் போது இந்திய அணி வீரர் தீபக் சாஹர் காயமடைந்ததால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு தொடரையும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனைப் படைத்தது.
இதில் கடைசிப்போட்டியில் ஆடிய இந்திய அணி வீரர் தீபக் சாஹர் வீசிய முதல் 2 ஓவர்களிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆனால் 2வது கடைசி பந்தை வீசும் போது அவருக்கு காலில் ஏற்பட்டதால் சக வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய அவருக்கு சாதாரண காயம் இருக்கும் என்ற நினைத்த நிலையில் தசை நார்கள் கிழிந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அடுத்து வரும் இலங்கை தொடரில் கூட தீபக் சாஹரால் பங்கேற்க முடியாது.
மேலும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய ஒன்றரை மாத காலங்களுக்கு மேல் வரை ஆகலாம் என்பதால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அவர் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் தீபக் சாஹரை 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்காக சென்னை அணி செலவு செய்த அதிக தொகை இது தான்.
இதனால் சென்னை அணியில் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய சிக்கல் சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ளது.