அணி நிர்வாகம் காட்டும் அலட்சியம் - திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?
ஐபிஎல் தொடருக்காக சென்னை, பஞ்சாப் அணிகள் பாதுகாப்பற்ற முறையில் அமீரகம் செல்லவுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் 2 ஆம் பாதி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல தொடங்கியுள்ளது.
இங்கிலாந்து தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பலரும் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக வீரர்கள் அமீரகம் செல்கின்றனர். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூன்று வீரர்களும் தங்களது குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் அமீரகம் சென்றடைந்தனர்.
ஆனால் சென்னை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்களுக்கு தனி விமானங்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றும் பயணிகள் விமானத்தில் தான் செல்லவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணியை சேர்ந்த ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, புஜாரா, சாம் கரண், மொயின் அலி ஆகியோரும், பஞ்சாப் அணியை சேர்ந்த கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், முகமது ஷமி ஆகியோர் இங்கிலாந்தில் இருந்து பயணிகள் விமானத்தில் அமீரகம் செல்கின்றனர்.
இதனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் திட்டமிட்டபடி போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.