இந்தாண்டு ஐபிஎல் கோப்பை எந்த அணிக்கு தெரியுமா? - தொடங்கியது சண்டை

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
நடப்பாண்டு ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வெல்லும் என்று அந்த அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இன்னும் ஒரு வார காலமே உள்ல நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மெகா ஏலத்தில் பல வீரர்களும் மற்ற அணிகளால் வாங்கப்பட்டதால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பு நிறைந்ததாக மாறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் 4 முறை கோப்பையை வென்றுள்ள இம்முறை கோப்பை வென்றால் மும்பை அணியின் சாதனையை சமன் செய்துவிடும். இதனிடையே சென்னை அணியின் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் அணியின் கேப்டன் தோனியுடன் காணொளி வாயிலாக பேசினார். அப்போது எனக்கு தோனி மீது நம்பிக்கை உள்ளது. இம்முறை சென்னை அணி தான் கோப்பையை வெல்லும். அதற்காக தோனிக்கு அழுத்தம் தரவில்லை. ஆனால் அவர் தரமான அணியை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் மற்ற அணிகளும் தாங்கள் தான் இம்முறை கோப்பையை வெல்வோம் என வரிந்து கட்டி பேசுவதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு நிறைந்ததாக இருக்க போகிறது.