Sunday, Jul 20, 2025

சென்னை அணியில் திடீர் மாற்றம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Msdhoni IPL2022 Chennaisuperkings TATAIPL2022 Newjerseyofcsk
By Petchi Avudaiappan 3 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதற்கான வீரர்களின் விவரம், புதிய ஜெர்சி, பயிற்சியில் ஈடுபடும் புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. இந்நிலையில் தோனி தலைமையிலான சென்னை அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதனை தோனி, ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் அணிந்துள்ள வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடந்த வருட ஜெர்சிக்கும், இந்த வருடத்திற்கான புதிய ஜெர்சிக்கும் பெரிதாக மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. விளம்பர நிறுவங்களின் பெயர் மட்டுமே மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.