‘வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்ட போட எவனுமில்ல’- 17 வருட அன்பில் தல தோனியும் சென்னையும்!

chennai dhoni relationship csk thala msd
By Swetha Subash Dec 03, 2021 07:23 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் உலகின் சிறந்த கேப்டன், அனைத்து ஐ.சி.சி. கோப்பைகளும் வென்று தந்தவர் என பல பெருமைகளுக்கு உரியவர் மகேந்திர சிங் தோனி.

இவர் ராஞ்சியை சொந்த ஊராக கொண்டிருந்தாலும் சென்னையின் செல்லப் பிள்ளையாகவே கருதப்படுகிறார்.

‘வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்ட போட எவனுமில்ல’- 17 வருட அன்பில் தல தோனியும் சென்னையும்! | Csk Msd Thala Dhoni Chennai Relationship 17Yrs

ரசிகர்கள் அனைவராலும் தல என அன்பாக அழைக்கபடும் தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குமான இந்த பந்தம் கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் தொடஙப்பட்டு தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக பதவியேற்றப்போது தொடங்கப்பட்டது அல்ல அதற்கு முன்பே நிகழ்ந்துவிட்டது.

ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் போட்டியில் நாட்டுக்காக விளையாடுவது மிகப் பெருமையான தருணமாகவே இருக்கும்.

ஆனால் தோனி இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் களமிறங்கி பெயர் வாங்கி அதன்பின் ஒரு வருடங்கள் கழித்து ஒரு வருடத்திற்கு பிறகு தான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

தனது வாழ்நாளின் இந்த மிக முக்கியமான டெஸ்ட் போட்டியில் கலந்துக்கொள்ளும் தருணத்தை தோனி சென்னையில் தான் தொடங்கினார்.

இதே நாள் 2005ஆம் ஆண்டு தான் தோனி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

‘வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்ட போட எவனுமில்ல’- 17 வருட அன்பில் தல தோனியும் சென்னையும்! | Csk Msd Thala Dhoni Chennai Relationship 17Yrs

டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியும் தோனி களத்திற்கு செல்ல 3 நாட்கள் ஆனது. இதற்கு காரணம் சென்னையில் அப்போது கன மழை பெய்து வந்ததே ஆகும்.

இதன் பின்னர் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து தடுமாறிய போது களத்திற்கு அறிமுக வீரராக வந்த தோனி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தாலும், தோனிக்கு மறக்க முடியாததாகவே அமைந்தது.

‘வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்ட போட எவனுமில்ல’- 17 வருட அன்பில் தல தோனியும் சென்னையும்! | Csk Msd Thala Dhoni Chennai Relationship 17Yrs

மேலும் இந்தப் போட்டியில் களமிறங்கிய போது தோனிக்கு தெரிந்திருக்காது இந்த மண் தான் தன்னை தத்தெடுக்க போகிறது என்று.

சமீபத்தில் தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய தோனி, தமக்கும், சென்னைக்கும் இடையிலான பந்தம் ஐ.பி.எல். முன்பாகவே தொடங்கிவிட்டதாகவும், சென்னையில் தான் முதல் டெஸ்டில் விளையாடினேன் என்றும் கூறியிருந்தார்.

அந்த நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகிறது.