மீண்டும் தல தோனிக்கு வந்த சிக்கல்...சென்னை அணியின் முக்கிய வீரர் விளையாடுவதில் சந்தேகம்..!

CSK MSDhoni ChennaiSuperKings IPL2022 MoeenAli தோனி ஐபிஎல் சென்னைசூப்பர்கிங்ஸ் VisaIssue தலதோனி
By Thahir Mar 22, 2022 12:00 AM GMT
Report

சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான மொயின் அலி இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

மீண்டும் தல தோனிக்கு வந்த சிக்கல்...சென்னை அணியின் முக்கிய வீரர் விளையாடுவதில் சந்தேகம்..! | Csk Moeen Alis Delay In Arrival Due To Visa Issues

2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.

இதுவரை நடைபெற்றுள்ள 14 தொடர்களில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

கடந்த தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தீபக் சாஹர் காயம் காரணமாக ஏப்ரல் மாதம் தான் சென்னை அணியில் இணைவார் என அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், மற்றொரு முக்கிய வீரரான மொய்ன் அலியும் முதல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மொய்ன் அலி குறித்து சென்னை அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் பேசுகையில், “மொயின் அலி இந்தியா வர அனுமதிக்கும் விசா அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை.

இருந்தாலும் விரைவில் அவருக்கு விசா கிடைக்கும் என நம்புகிறோம். இந்த விசா சிக்கல் குறித்து அவரிடம் பேசினோம். தேவையான அனைத்து ஆவணங்களும் அவரது தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் அவருக்கு விசா கிடைக்கவில்லை. அவருக்கு விசா கிடைத்ததும் இந்தியாவுக்கு அவர் பறந்து வந்து விடுவார். அதனை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.