தமிழக வீரருக்காக அடித்துக் கொண்ட ஐபிஎல் அணிகள் : கடைசியில் ஜெயித்தது யார் தெரியுமா?
ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் ஷாரூக்கானுக்கு அணிகள் போட்டி போட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. நேற்றைய ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம்பெற்ற நிலையில் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்கள் பலருக்குமிடையே கடும் போட்டி நிலவியது.
இதனிடையே விஜய் ஹசாரோ கோப்பை, சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரில் தனி ஆளாக நின்று தமிழக அணிக்கு வெற்றிகளைப் பெற்று தந்த ஷாரூக்கான் பெயர் அறிவிக்கப்பட்டதுடன் அவரை வாங்க சென்னை அணியும், பஞ்சாப் அணியும் கடும் போட்டி போட்டது.
அவரின் அடிப்படை விலை ரூ.40 லட்சம் என்ற நிலையில் சென்னை அணி 8 கோடியே 75 லட்சம் ரூபாய் வரை வழங்க முன்வந்தது. ஆனால் பஞ்சாப் அணியோ ரூ.9 கோடிக்கு ஷாரூக்கானை ஏலத்தில் எடுத்தது.
இதனால் தமிழக ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
அதேசமயம் பஞ்சாப் அணியில் நீடிக்க விருப்பம் இல்லாமல் தான் ஷாரூக்கான் ஏலத்திலேயே பங்கேற்றார். ஆனால், மீண்டும் பஞ்சாப் அணியே ஏலத்தில் எடுத்தது அவருக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்திருக்கலாம்.