இந்த சீசனையே சாமிக்கு விட்ருங்க.. விளாசும் ரசிகர்கள் - சிஎஸ்கே என்ன செய்யப்போகிறது?
சிஎஸ்கே அணி தோல்வியடைந்த நிலையில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சிஎஸ்கே தோல்வி
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதில் தோனி மிகவும் நிதானமாக ஆடி வெற்றியை நழுவ விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், சிஎஸ்கே அணியின் பேட்டிங் மொத்தமாக மோசமாக இருந்ததாக கேலி செய்து வருகின்றனர்.
என்ன செய்யப்போகிறது?
தொடர்ந்து இதனை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதுதான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. தற்போது 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 10 ஆட்டங்கள் மீதமுள்ளன. இதில் குறைந்தது 7 ஆட்டங்களில் சிஎஸ்கே அணி வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
அதற்கு அதிரடியாக ரன் குவிக்கும் பழைய பாணியை சிஎஸ்கே அணி வீரர்கள் கையில் எடுக்கவேண்டும். பவுலிங் துறையிலும் அதிக அளவில் சிஎஸ்கே அணி முன்னேற வேண்டியுள்ளது.
முகேஷ் சவுத்ரி, அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் சிறப்பான பந்துவீச்சை வழங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஃபீல்டிங்கிலும் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.