ஐபிஎல் கிரிக்கெட்: வெற்றியை தொடரும் முனைப்போடு கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை

cricket csk ipl
By Praveen Apr 21, 2021 01:31 PM GMT
Report

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஆண்டிற்கான 15வது ஐபிஎல் லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதுவரை இந்த இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் களம் கண்டுள்ளன. இதில் கொல்கத்தா அணி 1 முறை மட்டுமே தனது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

ஆனால் சென்னை அணியோ இதுவரை களம் கண்ட 3 போட்டிகளில் தொடர்ச்சியான 2 வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதனால், இன்றைய ஆட்டமானது ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை அணி ராஜஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி அதில் அபார வெற்றி பெற்றிருந்தது.

அதிலும் குறிப்பாகச் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்று கூட சொல்லலாம். மும்பை வான்கடே மைதானமானது பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக உள்ளது. இதனால், இன்று இரவு போட்டியின் போது இரு அணிகளிலும் உள்ள வீரர்கள் பந்துகளை மைதானத்தின் நாளா புறமும் சிதறடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய போட்டியில் சென்னை அணியில் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பிராவோ, ரூட்டுராஜ் கைக்வாட், சாம் கர்ரன், அம்பத்தி ராயுடு மற்றும் மொயின் அலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் களமிறங்குவார்கள்.

இதே போல் கொல்கத்தா அணியில் ராணா, சுமன் கில், ராகுல் திருப்பாத்தி, தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்கள் களமிறங்குவார்கள். இரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில், சென்னை 15 முறையும், கொல்கத்தா 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.