விரைவில் மகளிர் சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் விரைவில் பெண்கள் கிரிக்கெட்டில் முதலீடு செய்வதை உறுதிப்படுத்தியுள்ளார் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன்.
ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
2023ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடங்கிய போது மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, உபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜியண்ட்ஸ் முதலிய 5 அணிகள் மட்டுமே பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மகளிர் கிரிக்கெட்டில் களமிறங்க போவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய காசி விஸ்வநாதன், சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் தடத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது, எங்களது முதல் இலக்காக பெண்கள் கிரிக்கெட் இருக்கிறது, படிப்படியாக மற்ற போட்டிகளிலும் கவனம் செலுத்தவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் தடத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. எங்களுடைய முதல் இலக்காக பெண்கள் கிரிக்கெட் இருக்கிறது. படிப்படியாக மற்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்த உள்ளோம்” என கூறியுள்ளார்.
இதன்மூலம் சென்னை அணி விரைவில் மகளிர் பிரீமியர் லீக்கில் மகளிர் அணியை உருவாக்கும் என்பது உறுதியாகிறது.
CSK’s vision goes beyond the boundary 🦁🏏
— RevSportz Global (@RevSportzGlobal) February 3, 2026
From backing women’s cricket to strengthening the larger sports ecosystem, CSK is ready for the next leap.
🗣️ “The very next step for us will be to invest in women’s cricket.”
🗣️ “We picked MSD in 2008 — and he will forever remain our… pic.twitter.com/Jk19CmZGWP