சிஎஸ்கே இம்பாக்ட் வீரர்; 3 பேரை தேர்வு செய்த தோனி? யாரெல்லாம் தெரியுமா!
சிஎஸ்கே இம்பாக்ட் வீரர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சிஎஸ்கே
ஐபிஎல் 18ஆவது சீசன், மார்ச் 22ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் மோதவுள்ளன. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இம்பாக்ட் வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இம்பாக்ட் வீரர்
அன்ஷூல் கம்போஜ் ஆசியக் கோப்பை டி20 தொடரில், அபாரமாக பந்துவீசினார். தீபக் சஹாருக்கு மாற்றாக பவர் பிளே பௌலராக இவர் இருப்பார் எனக் கருதப்படுகிறது. ஷ்ரேயாஸ் கோபால் லெக் ஸ்பின் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.
சென்னை சேப்பாக்கம் போன்ற சுழலுக்கு சாதகமான பிட்சில், இவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ராகுல் திரிபாதி பவர் பிளே மற்றும் 10 ஓவர்களுக்குள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முடியும்.
தற்போது சேப்பாக்கத்தில், சிஎஸ்கே வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.