இந்த அணி தான் ஐபிஎல் கோப்பையை வெல்லும் - கெவின் பீட்டர்சன்
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து அணி வீரரான கெவின் பீட்டர்சன் கணித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ளதால் ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே ஐபிஎல் தொடர் குறித்து முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் தங்கள் கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர் கெவின் பீட்டர்சன் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் 4வது சீசன் தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியை Dad’s Army என்று பலரும் கிண்டலடித்தனர். ஆனால் 14வது சீசனின் முதல் பாதியில் சிஎஸ்கே அருமையாக ஆடியது. அடுத்த சில வாரங்கள் அந்த அணிக்கு வரலாற்று சிறப்புமிக்கவையாக அமையும். மீண்டுமொருமுறை சிஎஸ்கே கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.