சிஎஸ்கே அணிக்கு கிடைத்த குட் நியூஸ் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ipl2021 chennaisuperkings
By Petchi Avudaiappan Sep 21, 2021 10:47 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் 2வது பாதி ஆட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் சென்னை அணிக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. 

ஐபிஎல் 2021 தொடரின் 2-வது பாதி ஐக்கிய அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

 இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளோடு சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.இந்நிலையில் அக்டோபர் மாதம் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் வீரர்களுக்கு பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதாக கூறி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் ரத்து செய்தது.

இதனால் சிஎஸ்கே அணியில் உள்ள இங்கிலாந்து வீரர்களான மொயீன் அலி, சாம் கரண் ஆகியோர் 2வது பாதி தொடர் முழுவதும் விளையாடுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் சுற்றுப்பயணம் காரணமாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன் இங்கிலாந்து வீரர்கள் விலகுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் இந்த தகவல் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.