கண் கலங்கிய தோனி - சென்னை அணிக்கு அநியாயம் பண்ணிட்டாங்க : சீனிவாசன் பேச்சு

ஐபிஎல் பட்டம் வென்ற சென்னை அணிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் பேசும் போது கொஞ்சம் கண் கலங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.  4வது முறையாக கோப்பை வென்ற சென்னை அணிக்கு பாராட்டு விழா நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன், சென்னை அணிக்கு பெயர் சூட்டியது எப்படி, தோனியை தேர்வு செய்தது எப்படி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை ஸ்ரீனிவாசன் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். 

ஐ.பி.எல். முதல் சீசனுக்கான ஏலம் நடைபெற்ற போது, பலமான அணியையும், நல்ல தலைவனையும் உருவாக்க விரும்பினேன். இதற்காக ஏலத்தை கவனித்து கொண்டிந்த முன்னாள் வீரர் சந்திரேசகரை அழைத்து, நீங்க என்ன செய்வீங்கனு தெரியாது, எனக்கு தோனியை நம்ம அணியில் எடுத்தே ஆகனும் என்று கூறியதாக ஸ்ரீனிவாசன் நிகழ்ச்சியில் பேசினார்.

மேலும் சென்னை அணியை வாங்கிய பிறகு ஒரு நல்ல பெயரை சூட்ட வேண்டும் என்று நினைத்ததாக கூறினார்.அப்போது ஸ்ரீகாந்த் தான், குலுக்கல் முறையில் சீட்டு எழுதிப் போட்டு பெயரை எழுதியதாகவும், அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரையே அதிக முறை வந்தது, இதனாலேயே அந்த பெயரை வைத்து விட்டோம் என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுக்காலம் தடை விதித்தது குறித்தும் ஸ்ரீனிவாசன் பேசினார். தவறே செய்யாமல் இருந்த சென்னை அணிக்கு அநியாயம் நிகழ்ந்ததுவிட்டதாக கூறிய ஸ்ரீனிவாசன், அது ஒரு பெரிய விவகாரம், அதை பற்றி இங்கு பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார். தடைக்கு பிறகு சென்னை அணி வீரர்களுக்கு ஒரு சிறிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.

அப்போது தோனி முதல் முறையாக கண் கலங்கி அழுததை தாம் பார்த்தேன் என்று ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார். அந்த வருடம் சென்னை அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று அணி வீரர்களுடன் பேசிய தோனி, சொன்னதை செய்து காட்டிவிட்டார் என்று கூறினார். 

தோனி போல் ஒரு கேப்டன் இனியும் கிடைக்க மாட்டார். ஒரு வீரரை பார்த்த உடன் தோனி கூறிவிடுவார், இவர் நமது அணிக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று கணித்துவிடுவார்.. அவர் கூறியது எப்போதும் சரியாகவே அமையும், சாதாரண வீரர்களை கூட அசாதாரணமாக மாற்றும் திறமை தோனியிடம் உள்ளது. நெருக்கடியான நிலையில் தோனி எப்போதும் அமைதி காப்பார். தோனி ஓய்வு குறித்து பத்திரிகையாளர்கள் கேட்பதே தவறு என்றும் ஸ்ரீனிவாசன் பேசினார்.

You May Like This


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்