2 பேருக்காக 28 கோடியை கொட்டிய சிஎஸ்கே - ஐபிஎல் வரலாற்றில் புதிய ரெக்கார்ட்!

Chennai Super Kings IPL 2026
By Sumathi Dec 17, 2025 09:40 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம் செய்த செயல், கிரிக்கெட் உலகையே திருப்பி போட்டுள்ளது.

சிஎஸ்கே

2022-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆவேஷ் கானை ரூ.10 கோடிக்கு வாங்கியதே அன்கேப்ட் வீரருக்கான அதிகபட்ச தொகையாக இருந்தது.

பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா

ஆனால், பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இருவருமே தலா ரூ.14.20 கோடிக்கு ஏலம் போய், அந்தச் சாதனையை 40 சதவீதம் அதிக வித்தியாசத்தில் முறியடித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம், அமேதி பகுதியைச் சேர்ந்த 20 வயதான பிரசாந்த் வீர், ஒரு இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர். ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியில் இல்லாத குறையைத் தீர்க்கவே சிஎஸ்கே இவரைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம் கட்டணம் - பின்னணி!

மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம் கட்டணம் - பின்னணி!

ஏலம்

சையத் முஷ்டாக் அலி தொடரில் 169.69 ஸ்ட்ரைக் ரேட்டில் 112 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உத்தரப் பிரதேச டி20 லீக்கில் நொய்டா அணிக்காக 10 போட்டிகளில் 320 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

2 பேருக்காக 28 கோடியை கொட்டிய சிஎஸ்கே - ஐபிஎல் வரலாற்றில் புதிய ரெக்கார்ட்! | Csk First Time Ipl Auction History 2026

ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தான் கார்த்திக் சர்மா. இதுவரை விளையாடிய 12 டி20 போட்டிகளில் 334 ரன்கள் குவித்துள்ளார்.

இவரை வாங்க கேகேஆர், எஸ்ஆர்ஹெச், எல்எஸ்ஜி என நான்கு அணிகள் மோதின. இறுதியில் சிஎஸ்கே 14.20 கோடிக்கு இவரைச் சொந்தமாக்கியது.