தொட்டு பாரு நாங்க தாறு மாறு : இன்று RR Vs CSK பலப்பரீட்சை!

Chennai Super Kings IPL 2023
By Irumporai Apr 27, 2023 03:07 AM GMT
Report

இன்று ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளதால் ஆட்டக்களம் சூடு பிடித்துள்ளது.

 ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் லீக் போட்டிகளின் முதல் பாதி முடிந்துள்ளது. 7 போட்டிகளில் 5 போட்டிகள் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிம் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதவுள்ளது.

தொட்டு பாரு நாங்க தாறு மாறு : இன்று RR Vs CSK பலப்பரீட்சை! | Csk Finish With Rajasthan Royals

 ரசிகர்கள் ஆவல்

கடந்த 12ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் – சிஎஸ்கே இடையேயான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் 175 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணியை சேஸ் செய்ய முடியாமல் 172 ரன்களில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. சிஎஸ்கேவின் சொந்த மைதானத்தில்  சிஎஸ்கேவை தோற்கடித்த ராஜஸ்தான் ராயல்ஸை இன்று அதன் சொந்த மைதனாத்தில் சிஎஸ்கே தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்களிடையே உள்ளது.