RCB தான் கப் ஜெயிக்கணும் - ரெய்னா..! அப்செட்டில் CSK ரசிகர்கள்..!
இந்த ஆண்டு பெங்களூரு அணி தான் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது சென்னை அணி ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெய்னா
சென்னையின் அணியின் "சின்ன தல" என இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரராகவே சுரேஷ் ரெய்னா தொடருகிறார்.
அணி நிர்வாகத்திடம் ஏற்பட்ட சில மனக்கசப்பின் காரணமாக, ஜபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரெய்னாவை இன்னமும் பல சென்னை அணி ரசிகர்கள் மிஸ் தான் செய்கிறார்கள்.
இப்படி சென்னை அணி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரெய்னா, பெங்களூரு அணி தான் இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என தெரிவித்துள்ளது பெரும் சோகத்தை சென்னை அணி ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
RCB தான்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா,RCB அணி தொடர்ந்து போராடி வரும் நிலையில்,அவர்களே இம்முரை கோப்பையை வெல்லவேண்டும் என அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், நிறைய கோப்பைகளை வைத்திருக்கும் விராட் கோலியிடம் மிஸ்ஸாவது, ஐபிஎல் கோப்பை தான் என்றும் இம்முறை சாம்பியன் பட்டத்தை விராட் கோலி வெல்ல தகுதியான நபராக இருக்கிறார் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.