CSK மேட்ச் டிக்கெட் இருந்தால் போதும்.. மெட்ரோவில் இலவசம் - அசத்தல் அறிவிப்பு!
சிஎஸ்கே மேட்ச் பார்க்க செல்பவர்களுக்கு சென்னை மெட்ரோ அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிஎஸ்கே
சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி மே 14 வரை மொத்தம் 7 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ஐபிஎல் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
16வது ஐபிஎல் சீசன் 2023 தொடங்கிவிட்டது. இதில் சென்னை மெட்ரோ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவை கைகோர்த்து செயல்பட உள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியின் போட்டி நடைபெறும் நாட்களில் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.
மெட்ரோவில் இலவசம்
இதற்காக போட்டியை காண செல்லும் ஐபிஎல் டிக்கெட்களை மட்டும் காட்டினால் போதும். அதுமட்டுமின்றி அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானம் வரை மினி பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதிலும் கட்டணம் எதுவும் தேவையில்லை.
சென்னையில் லேட் நைட்டில் முடியும் ஐபிஎல் போட்டிகளின் போது இரவில் கூடுதலாக 90 நிமிடங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. நந்தனம், வடபழனி, விம்கோ நகர், திருமங்கலம்,
சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் பிரம்மாண்ட எல்.இ.டி திரையில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகளை பயணிகள் காணலாம்.
தொடர்ந்து பார்க்க வேண்டுமெனில் ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.