‘இலங்கை வீரரை ஏன் அணியில் சேர்த்தீங்க...’ - உலகெங்கும் சிஎஸ்கேவை புறக்கணித்து ரசிகர்கள் போராட்டம்

Cricket Hashtag Trending CSK fansstruggle #Boycott_ChennaiSuperKings
By Nandhini Feb 15, 2022 05:45 AM GMT
Report

உலகெங்கும் உள்ள CSK தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மவுசு அதிகம் உள்ளது. தல தோனியை மகுடம் சூடாத மன்னனாக சென்னை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால், இந்த ஐபிஎல் ஆக்‌ஷன் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை வரவழைத்துள்ளது.

சிஎஸ்கே நிர்வாகம் சிஎஸ்கே-வின் முதுகெலும்பாக இருந்த ரெய்னாவை ஏலத்தில் கண்டுக்கொள்ளவில்லை. அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம், இலங்கை வீரர் மஹீத் தீக்‌ஷனாவை ரூ.70 லட்சத்துக்கு சிஎஸ்கே ஏலம் எடுத்துள்ளது தமிழக ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக, தற்போது #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது. இதில், ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் ஆக்‌ஷன் தொடங்கியதும் சிஎஸ்கே, yellow army என தெறிக்கவிடும் சிஎஸ்கே ரசிகர்கள் இந்தமுறை சென்னை சூப்பர் கிங்ஸை புறக்கணிக்கிறோம் என பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனதற்கு 2 பெயர்கள் முக்கிய காரணம் சுரேஷ் ரெய்னா மற்றும் இலங்கை வீரர் மஹீத் தீக்‌ஷனா.

பாகிஸ்தான் கூட இந்தியாவிற்கு எதிரி கிடையாது. தமிழக மீனவர்களை தினமும் துன்புறுத்தும் இலங்கையும் இந்தியாவுக்கு எதிரிதான். பாகிஸ்தான் வீரர்களை நாடு விரும்பவில்லை என்பது போல் இலங்கை வீரர்களை தமிழர்கள் விரும்பவில்லை என்று பலர் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ள இளம்வீரர் இலங்கை ராணுவம் அணிக்காக விளையாடியவர். உடனடியாக இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையீட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.