எல்லை மீறி போகும் ரசிகர்கள் trolls...விராட் கோலி சொன்ன அந்த விஷயம் நினைவிருக்கா?
ஆர்சிபி அணியின் தோல்வியை சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
சிஎஸ்கே ரசிகர்கள்
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுத்தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் ஆர்சிபி அணியின் கோப்பை கனவு மீண்டு பறிபோனது.
ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆட களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே குவித்தது.பின்னர் அந்த இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் நிர்ணயித்த இலக்கை முறியடித்து அபார வெற்றி பெற்றது.இதனால் அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகவும் சோகமாக காணப்பட்டார்.
விராட் கோலி
இதுவரை நடந்த போட்டிகளில் முழுக்கவே விராட் கோலியின் அக்ரஷன் கூடுதலாக இருந்தது. அந்த வகையில், சிஎஸ்கே அணியை வீழ்த்திய போது ஆர்சிபி அணி மற்றும் அதன் ரசிகர்கள் அடாவடியாக கொண்டாடினர். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே ரசிகர்களை சீண்டுவது, மைதானத்திற்கு வெளியில் அத்துமீறியது,
சிஎஸ்கே வீரர்கள் பயணித்த பேருந்து முன் ஆவேசமாக கொண்டாடியது என்று ஏராளமான வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையானது. இது சிஎஸ்கெ ரசிகர்கள் கோபமடைய செய்தது. தற்போது அணி தோல்வியை தழுவியதை சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி கொடுக்கும் விதமாக சோசியல் மீடியாவில் ஒரு மீம் திருவிழா வைத்து ஆர்சிபி ரசிகர்களை பொளந்து கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், விராட் கோலியின் பாணியில் சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த சீசனில் கம்பீரை வம்புக்கு இழுத்த பின் விராட் கோலி, If you can't take it, Better don't give it என்று கூறி இருப்பார். அதேபோல் ஆர்சிபி அணி ரசிகர்கள் அமைதி காத்திருந்தால், இப்போது நாங்கள் கலாய்க்க தேவை வந்திருக்காது என்று கூறி வருகின்றனர்.