சென்னை அணிக்கு வில்லனாக மாறிய கிருஷ்ணப்பா கவுதம் - திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததற்கு கிருஷ்ணப்பா கவுதம் தான் காரணம் என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 136ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
ஒருகட்டத்தில் டெல்லி - சென்னை அணிகள் இடையே வெற்றி பெறுவது குறித்து கடும் போட்டி நிலவியது. ஆனால் ஆட்டத்தின் 18 ஓவர் சென்னை அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது.
ட்வைன் ப்ராவோ வீசிய அந்த ஓவரில் ஹெட்மேயர் அடித்த ஒரு பந்தை கிருஷ்ணப்பா கெளதம் பவுண்டரி லைன் அருகே தவற விட்டார். இதேபோல் சென்னை அணி வீசிய ஐந்தாவது ஓவரில் 21 ரன்கள் பறிபோனது. இதுவும் டெல்லி அணி வெற்றி பெற மிகப்பெரிய காரணமாக அமைந்தது.
9cr kuduthu
— Tharun (@tharunofficial_) October 4, 2021
Dubai ku kootitu vanthu
Ac room kuduthu
Una subt fielder ah kondu vanthathuku unnala ena panna mudiyumoo pannite?#KrishnappaGowtham #CSKvDC https://t.co/KzWImYJ1tu pic.twitter.com/jkno5ieycH